இன்றைய ராசிபலன் (30.10.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

450

இன்றைய ராசிபலன்…

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா வேலையிலும் சுறுசுறுப்பு இருக்கும். பொறுப்புடன் சில வேலைகளை எடுத்து முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். சொந்தத் தொழிலில் நீங்கள் போடும் முதலீடு இரண்டு மடங்கு லாபத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பிரமோஷனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீங்க. பண விஷயத்தில் உஷாரா இருங்க.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு அதிகமாக இருக்கும். இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையை நீங்களே செய்து முடித்து பாராட்டையும் பெறுவீர்கள். கூலி தொழிலாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் நிறைந்த நாள் இது. தினசரி வருவாய் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். பெண்களின் மனது சந்தோஷப்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கப் போகின்றது. சிலபேருடைய பாராட்டுக்கள் உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது நல்லது. கூர்மையான ஆயுதங்களை கவனமாக பயன்படுத்துவோம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப குடைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். யாராவது ஒருவர் உங்களை குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன நல்லது செய்தாலும் அதற்கு கெட்ட பெயர் வாங்கி தர ஒரு கும்பல் இருக்கும். அதை பற்றி கவலைப்படாதீங்க. உங்களுடைய வேலைகளை நீங்கள் சிறப்பாக செய்யுங்கள். உங்கள் மனதிற்கு திருப்தி தரும்படி வேலைகளை செய்யும் போது வெற்றி நிச்சயம் கிடைக்கும். அடுத்தவர்களை பற்றி இன்று நீங்கள் ஒரு துளி கூட கவலைப்பட கூடாது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். மேலதிகாரிகளை எதிர்த்துக் கொள்ள வேண்டாம். இருக்கும் வேலையை காப்பாற்றிக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் செய்யக்கூடாது. இன்று கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கவனங்கள் சிதறும். எந்த ஒரு வேலையிலும் கான்சென்ட்ரேஷன் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். ஆகவே வேலைகளில் சின்ன சின்ன பிழையின் மூலம் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கலாம். தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். தவறுகளை பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். சோர்ந்து போகக்கூடாது. துவண்டு போகக் கூடாது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விவகரங்களில் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம். பெரியவர்கள் சொல்படி கேளுங்கள். வியாபாரத்தில் முன்பின் தெரியாதவர்களுடைய ஆலோசனையை காதில் வாங்கிக் கொள்ளாதீங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் முயற்சியை போட்டால் தான் வெற்றி கிடைக்கும். புது மனிதர்களை நம்ப வேண்டாம். ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் இன்று காலை வைக்கக்கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாரா இருக்கணும். ஜாமின் கையெழுத்தும் போடக்கூடாது. குறிப்பாக முன்பின் தெரியாதவர்கள் உதவி என்று வந்து கேட்டால் செய்யாதீங்க. உங்களை ஏமாத்திட்டு போயிடுவாங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பல் இருக்கும். மனசு ஏதோ கஷ்டத்திலேயே மூழ்கி இருக்கும். முகத்தில் சிரிப்பு இருக்காது. கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ஏதோ இன்றைய நாளை கடந்து செல்ல வேண்டுமே என்ற கவலையோடு இருப்பீங்க. மன உளைச்சலில் இருந்து வெளிவர குழந்தைகளோடு நேரத்தை செலவிடலாம். கோவிலுக்கு செல்லலாம். மனசுக்கு பிடிச்ச பாடல் கேட்கலாம். மனைவியுடன் மனம் விட்டு பேசலாம். நிச்சயம் மனது தெளிவு பெறும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. அடுத்தவர்களை உதாசீனப்படுத்த கூடாது. சுயநலமாக எதையும் யோசிக்க கூடாது. அடுத்தவர்களுடைய உணர்ச்சிக்கு மரியாதை கொடுத்து நடந்து கொண்டால், இன்று நன்மை நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலைகளில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொடக்கம் மிக மிக அற்புதமாக இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும்.