இன்றைய ராசிபலன் (30.11.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

55

இன்றைய ராசிபலன்…

மேஷம்

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். சந்தோஷமாக அன்றாட வேலையை செய்வீர்கள். யாராவது திட்டினால் கூட மனம் சோர்ந்து போக மாட்டீர்கள். நாம் செய்த தவறுக்காக தான் திட்டு கிடைத்தது என்று உங்கள் வேலையை பார்க்க தொடங்கி விடுவீர்கள். மனசு லேசாக இருக்கும். மனதில் இருந்த பாரங்கள் எல்லாம் இறங்கியது போல ஒரு உணர்வு. சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகவும். நீங்களே மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடாதீங்க. வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். வியாபாரத்தில் புதிய முதலீட்டை செய்ய வேண்டாம்.பார்ட்னரிடம் உஷாராக இருந்துக்கோங்க. பணம் காசு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவு நிறைந்த நாளாக இருக்கும். மனக்குழப்பத்திலிருந்து வெளி வருவீர்கள். தவறாக புரிந்து கொண்டவர்களையும் சரியாக புரிந்து கொள்ள கூடிய காலமும் நேரமும் வந்துவிட்டது. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். சின்ன சின்ன வியாபாரிகள் முதல் பெரிய தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் வரை இன்று சுறுசுறுப்பாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். கை நிறைய பணமும் சம்பாதிப்பீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று அனாவசியமாக சிந்தித்து மனசை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. மூன்றாவது நபருக்காக யோசித்து யோசித்து உங்கள் வாழ்க்கையை வாழாமல் விட்டு விடாதீர்கள். அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் அதன் போக்கில் நம்மால் வாழ முடியாது. அடுத்தவர்களுக்காக வாழ ஆரம்பித்தால் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு நல்லது நடக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவைகள் பூர்த்தியாக கூடிய நாளாக இருக்கும். மனதில் நினைத்தது நல்லபடியாக நடக்கும். குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட தூர பயணம் வெற்றியைக் கொடுக்கும். சில பேருக்கு இடம் மாற்றம் வர வாய்ப்புகள் உள்ளது. வேலையாக இருந்தாலும் சரி, இருக்கின்ற வீடாக இருந்தாலும் சரி, இடமாற்றம் உங்களுக்கு நல்லதை கொடுக்கும். ஏற்றுக் கொள்ளுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சோம்பேறித்தனம் முட்டுக்கட்டையாக வந்து நிற்கும். நிறைய வாய்ப்புகள் வீடு தேடி வரும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அதை நீங்கள் தட்டி கழித்து விடுவீர்கள். வாய்ப்புகளைத் தவறவிடும் நாள். இது ஆகவே உஷாராக இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கான வாய்ப்பை தட்டிக் கழித்து விட்டால் வாழ்க்கையில் நல்ல சான்சை மிஸ் பண்ணிட்டோமே என்று பின்னாடி வருத்தப்படுவீங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும் எதிர்பாராத பண வரவு இருக்கும். ரொம்ப நாள் முன்னாடி முயற்சி செய்த காரியங்களுக்கான நல்ல பலன் இன்று தெரியவரும். சில பேர் எதிர்கால சேமிப்புக்கு உண்டான வழியை சிந்திப்பீர்கள். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். வியாபாத்தில் நல்ல முன்னேற்றம் தரும் நாள் இது. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வரவும் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். சேமிப்புகள் கரையும். ஆடம்பர செலவை செய்யாதீங்க. அத்தியாவசிய செலவு என்றால் மட்டும் பணத்தை செலவு செய்யவும். மனைவிக்கு பிடித்தபடி இன்று கணவன்மார்கள் நடந்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் சில பேருக்கு மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வேலையில் கவனம் தேவை. கவனக் குறைவால் பிரச்சனை வர வாய்ப்புகள் உள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பொறுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும். நிதானத்தை இழந்தால் பிரச்சனை உங்களுக்குத்தான். முன்கோபம் வரக்கூடாது. பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது. அடம்பிடிக்க கூடாது. நீங்கள் சரி என்று இன்று செய்யக்கூடிய காரியம் எதிர்காலத்தில் உங்களுக்கு பிரச்சினையை கொடுத்து விடும். ஜாக்கிரதை, அனுபவசாலிகள் சொல்லும் அறிவுரையை கேட்டு நடந்தால் இன்று பிரச்சனை இல்லை.

மகரம்

மகர ராசிக்காரர்கள் என்று வம்பு சண்டைக்கு போகக்கூடாது. வந்த சண்டையையும் போடக்கூடாது. தேவையற்ற பிரச்சினைகள் இன்று உங்களைத் தேடி வரும். இருந்தாலும் நீங்கள் அமைதி காக்கவும். குடும்பமாக இருந்தாலும் சரி, வெளியிடங்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, எல்லோரிடமும் இன்று அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். சண்டைக்கு போனா பின்பு உங்கள் மண்டை தான் உடையும் ஜாக்கிரதை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன அழுத்தம் இருக்கும். வேலையில் சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கும். அடுத்தவர்களுடைய வேலையையும் சேர்த்து உங்கள் தலைமையில் கட்டி விடுவார்கள். உங்களால் எந்த வேலையை செய்வது, எந்த வேலையை விடுவது என்று தெரியாமல் திணறப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் பாதிப்பு இருக்கும். இதனால் முன்கோபம் வரும். உடல் அசதி மனசோர்வு வர வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு வாரத்து வேலையை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் கூட சில பேருக்கு இருக்கும். அன்றாட வேலைகளை அன்றாடம் செய்து பழகுங்கள். நாளை செய்யலாம் என்று தள்ளிப் போடாதீங்க. உங்களுடைய சோம்பேறித்தனம் தான் வாழ்க்கையில் பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கிறது. முன்கோபத்தை குறைக்கவும். தகாத தவறான வார்த்தைகளை உபயோகிக்க கூடாது.