இருசக்கர வாகனத்தில் மகிழ்ச்சியாக சென்ற குடும்பம்.. கணவர் கண்முன்னே மனைவி, குழந்தைக்கு நடந்த கொடூரம்!!

818

காஞ்சிபுரம்…

காஞ்சிபுரம் ஓரிக்கை பேராசிரியர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு வித்தியா என்ற மனைவியும் பூர்ணிகா, பூர்விகா 7 வயதில் (Twins)என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் அடுத்துள்ள ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் சுப நிகழ்ச்சிக்காகத் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் இரு மகளுடன் காஞ்சிபுரம் உத்திரமேரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, ஓரிக்கை காந்திநகர் அருகே சென்ற போது, மணல் லாரி ஒன்று வேகமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் மனைவி வித்தியா, மகள் பூர்ணிகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காகக் காஞ்சிபுரம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த பழனியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாலை விபத்தில், கணவர் கண்முன்னே மனைவி, குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.