இலங்கையில் சர்வதேச விமான நிலையங்களை மீண்டும் 26ம் திகதி முதல் திறக்க தீர்மானம்!!

732

விமான நிலையங்களை..

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள சர்வதேச விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் சர்வதேச விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சிவில் விமான சேவை அதிகார சபை தலைவர் உப்புல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க, மத்தல, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்களுக்கு வணிக விமானங்கள் மற்றும் நிலையான நேர அட்டவணையின்றி பயணிக்கும் விமானங்களுக்கு தங்கள் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.


அங்கு பின்பற்ற வேண்டிய செயற்பாடு மற்றும் சுகாதார ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் அவ்வாறு மீண்டும் சர்வதேச விமான பயணங்களுக்காக நாட்டை திறப்பது தொடர்பில் நிலையான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.