இளம்பெண்ணை வைத்து மளிகைக்கடைக்காரருக்கு அரை நிர்வாண ஸ்கெட்ச்.. பணம் பறித்த கும்பல் சிக்கியது எப்படி?

350

சேலம்….

சேலம், பள்ளப்பட்டி ஜவகர் மில் பகுதியைச் சேர்ந்தவர் பிரபுராஜ். இவர் சேலம் லீ பஜாரில் மளிகைக்கடை வைத்திருக்கிறார். இவரின் குடும்பத்தினர் அழகாபுரத்தில் வசித்துவருகின்றனர்.

கடந்த வாரம், பிரபுராஜின் வீட்டுக்கு வீட்டு வேலைசெய்ய பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த மும்தாஜ் பேகம் என்பவர் வந்திருக்கிறார். அந்தப் பெண்ணிடம் தனது வீட்டில் நிரந்தரமாக வேலைசெய்ய ஒரு பெண்ணை அனுப்பிவைக்க வேண்டும் என பிரபுராஜ் கேட்டிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 26 -ம் தேதி இரவு வீட்டு வேலைசெய்ய வந்திருப்பதாக, குகை பகுதியைச் சேர்ந்த நித்யா எனும் இளம்பெண் சென்றிருக்கிறார். அப்போது சிறிது நேரத்தில் அந்த வீட்டுக்கு,


கோட்டைப் பகுதியைச் சேர்ந்த உமர் பாரூக் எனும் நபர் சென்று பிரபுராஜிடம் தன் மனைவி அங்கு வந்ததாகக் கூறி, `என் மனைவிக்கும், உனக்கும் என்ன தொடர்பு?’ என்று பேசியிருக்கிறார். அப்போது பாத்ரூமிலிருந்து நித்யா அரை நிர்வாண உடையில் வெளியே வந்திருக்கிறார்.

இதை உமர் பாரூக் தனது செல்போனில் பிரபுராஜுடன் நித்தியா இருப்பதுபோல் புகைப்படம், வீடியோ எடுத்துவைத்திருக்கிறார். பின்னர் பிரபுராஜிடம், “நீயும், என் மனைவியும் ஒன்றாக இருக்கும் வீடியோ என்னிடம் இருக்கிறது. இதை நான் வெளியில்விடப் போகிறேன்.

இவற்றை வெளியில் விட வேண்டாம் என்றால் ரூ.1.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும்” என்று மிரட்டியிருக்கிறார். பின்னர் வேறு வழியில்லாமல் பிரபுராஜ் கேட்ட பணத்தைக் கொடுத்திருக்கிறார்.

பின்னர் இரண்டு நாள்கள் கழித்து உமர் பாரூக் பிரபுராஜைத் தொடர்புகொண்டு, இன்னும் இரண்டு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் நடந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் பிரபுராஜ் புகார் கொடுத்தார்.

அதன் மூலம் பள்ளப்பட்டி குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில், மளிகைக்கடை வியாபாரி பிரபுராஜ் பற்றி கடந்த ஒரு மாத காலமாகத் தகவல் சேகரித்து, அவரை எப்படி மடக்கிப் பணம் பறிக்கலாம் என்ற திட்டம் வகுத்திருக்கின்றனர். அதன் மூலம் இது போன்று பெண்ணுடன் தனியாக இருப்பது போன்ற படங்கள் எடுத்து மிரட்டியிருக்கின்றனர்.

மேலும் மேற்கண்ட ஆறு பேர்கொண்ட கும்பல் சேலத்தில் இதுபோலப் பல தொழிலதிபர்களிடம் தனது தில்லாலங்கடி வேலைகளைச் செய்திருக்கின்றனர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதன் மூலம் போலீஸார் மேற்கண்ட ஆறு பேரையும் சேலம் சிறையில் அடைத்தனர்.