இளம் பெண்ணை 100 பேருடன் வந்து கடத்திய காதலன் : கதறும் தாய்!!

869

தெலுங்கானா..

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அதிபத்தில் வெள்ளிக்கிழமை ஒரு கொடூரம் நடந்துள்ளது. ராகன்னகுடா பகுதியைச் சேர்ந்த வைஷாலி என்ற இளம்பெண் 100 பேரால் கடத்தப்பட்டார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த நபர் டீ டைம் நிறுவன உரிமையாளர் நவீன் ரெட்டி என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். வைஷாலியும், நவீன் ரெட்டியும் சில காலமாக காதலித்து வந்ததாகவும், ஆனால் வைஷாலியின் பெற்றோர் அவரை திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை என்றும் தெரிகிறது.

வைஷாலிக்கு சமீபத்தில் வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நேரத்தில் நவீன் ரெட்டி 100 குண்டர்களுடன் வந்து வைஷாலியை வற்புறுத்தி தன்னுடன் வருமாறு மிரட்டியுள்ளார்.


வைஷாலியின் குடும்பத்தினர் மற்றும் தடுக்க வந்த அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வீடு முழுவதும் சூரையாடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.