இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தினர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!!

1248

உளுந்தூர்பேட்டை..

கள்ளக்குறிச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அ.குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ருபேந்திரன், கனிமொழி.  இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் கணவர் ருபேந்திரன் பெண்ணின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.


இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், அண்ணன், தங்கை, உறவினர்கள் கதறி அழுதுள்ளனர்.

இதனையடுத்து பெண்ணின் அண்ணன் தனது தங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.