இளைஞனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த 30 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி! நடந்த விபரீத சம்பவம்!!

622

கேரளா…………

கேரளாவில் இளைஞன் ஒருவனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த 30 வயது பெண், அந்த இளைஞனால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் அடுத்த கூத்தாட்டுகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சோனா(30). பல மருத்துவரான இவர் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். சோனா கூட்டா நல்லூரில் கிளினிக் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று, சோனா கிளினிக் உள்ளே கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடியுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், போகும் வழியிலே சோனா உயிரிழந்துவிட்டார். அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தன்னை கத்தியால் குத்தியது, தன்னுடன் லிவிங் டுகெதராக இருந்த மகேஷ் என்று சோனா அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.


இதையடுத்து இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட, பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல் கிளினிக் நடத்திவந்த மருத்துவர் சோனாவிடம் நிறையப் பணம் இருக்கும் தகவல் அறிந்த மகேஷ் அவருடன் நெருங்கி பழகியுள்ளர.

அவருக்கு உதவுவது போன்று, நட்பாக பழகி, அதன் பின் அவரை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதில் மயங்கிய சோனா, மகேஷ் உடன், குரியச்சிரை பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் லிவிங் டுகெதராக வாழ்க்கை நடத்தியுள்ளார்.

அப்போது சோனாவிடம் இருந்து மகேஷ் கொஞ்சம் கொஞ்சமாக 22 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளார். ஒரு கட்டத்தில், சோனா தான் கொடுத்த பணத்தை மகேஷிடம் திருப்பி கேட்டதால், இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதன் பின் இருவரும் பிரிந்துள்ளனர். இதையடுத்து சோனா, காவல்நிலையத்தில் மகேஷ் மீது பணமோசடி புகார் அளித்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மகேஷ், சம்பவ தினத்தன்று சோனாவின் கிளினிக்கிற்கு சென்று, அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும், வாக்குவாதம் முற்றிய நிலையில், மகேஷ், சோனாவை கத்தியால் சரமாரியாகக் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். தப்பிச் சென்ற மகேஷை பொலிசார் தேடி வருகின்றனர்.