இளைஞனை போன் செய்து தனது வீட்டுக்கு வர சொன்ன காதலி! இரவில் அங்கு சென்ற அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

579

இந்தியா……….

இந்தியாவில் காதலி வீட்டுக்கு சென்ற காதலனை அவர் குடும்பத்தார் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் தீரா பிப்பர்கீடா கிராமத்தை சேர்ந்தவர் விஜய் நிஷாத் (22). இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு விஜய்க்கு போன் செய்த காதலி தனது வீட்டு அவரை வரும்படி கூறினார்.

இதையடுத்து விஜய் தனது காதலி வீட்டுக்குள் சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


காரணம் காதலியின் குடும்பத்தார் விஜய்யை எதிர்பார்த்தபடி தயாராக இருந்தனர், இதையடுத்து அவரை சரமாரியாக அடித்து கொலை செய்து சடலத்தை வெளியில் தூக்கி போட்டனர்.

அடுத்தநாள் காலை தகவலின் பேரில் பொலிசார் வந்து விஜய் சடலத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.