உச்சக்கட்ட போதையில் மல்லாந்து படுத்து கிடக்கும் எலி குட்டி? கனடாவில் நடந்த சுவாரஷ்யம்! மிரள வைக்கும் அரிய புகைப்படம்!!

753

கனடா…..

கனடாவில் கஞ்சா இலைகளை சாப்பிட்டு அந்த போதையில் மயங்கி கிடக்கும் குட்டி எலியின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

கனடாவின் நியூ பிரன்சுவிக் நகரில் சிறிய அளவிலான கஞ்சா செடியை வளர்ப்பது சட்டபூர்வமானது.

இந்நிலையில் கொலின் சல்லிவன் என்பவர் கஞ்சா செடியை வளர்த்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு குட்டி எலி அந்த இலைகளை விட்டு விலகி செல்வதை அவர் கவனித்துள்ளார்.


அதன் பின்னர் தனது கஞ்சா செடியின் இலைகளை எலி சாப்பிட்டுள்ளதை கண்டுப்பிடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு சிறிய எலி போதையின் உச்சத்தில் தனது முதுகை தட்டையாக வைத்து மல்லாந்து படுத்து கிடப்பதை பார்த்துள்ளார். அதனை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும் சல்லிவன் தனது பேஸ்புக்கில் அந்த எலியின் நிலை குறித்த புகைப்படங்களை தொடர்ச்சியாக பகிர்ந்துள்ளார்.

விதைகள் மற்றும் தண்டுகளுக்கு இடையே அதிக போதையுடன் இருக்கும் படங்களை பகிர்ந்துகொண்ட அவர், “போதை பொருளுடன் நீண்ட மற்றும் அவநம்பிக்கையான போருக்கு பிறகு, இந்த சிறிய சுட்டி எலி தனது செடியின் விதைகளையும், தண்டுகளையும் எடுத்து கொண்டு போராட்டத்திற்கு தயாராகி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த புகைப்படங்களை தீயாய் பரவி வருகின்றது.