உடலில் இருந்து பேயை விரட்டுவதாக கூறிய மந்திரவாதி.. 18 வயது பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!!

372

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக கருதிய குடும்பத்தினர், மந்திர தந்திரம் அறிந்த மோதிலால் (52) என்ற நபரிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மோதிலால் அவருக்கு பேய் பிடித்திருப்பதாக கூறியுள்ளார்.

அதனை நம்பிய இளம்பெண்ணின் குடும்பத்தினர் அதற்கு 4,000 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டதையும் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று மோதிலாலிடம் இளம்பெண்ணை அவரது தந்தை அழைத்து சென்றுள்ளார்.

குறித்த பெண்ணை கோவிலுக்கு பின்னால் உள்ள அறைக்கு அழைத்து சென்ற மோதிலால், அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதன் பின்னர் மறுநாள் தன்னை வந்து சந்திக்குமாறு அப்பெண்ணிடம் கூறிய மோதிலால், நடந்ததை யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.


ஆனாலும், இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அதன் பிறகு மோதிலால் மீது பெண்ணின் தந்தை பொலிஸில் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் சட்டப்பிரிவுகள் 363, 376, 420 மற்றும் 506யின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானார்.