உன்னோட பாய் பிரண்டு கிட்ட பேசுவதை இத்தோட நிறுத்திக்கோ.. கண்டித்த கணவர்.. மனைவி எடுத்த விபரீத முடிவு!!

1111

சென்னையில்..

சென்னை அண்ணாநகர் மூவேந்தர்நகர் 7-வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். மனைவி பெயர் புவனேஷ்வரி.

30 வயதாகிறது.. இவர்களுக்கு கல்யாணமாகி 10 வருடங்கள் ஆகின்றன.. 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.. இந்த நிலையில் புவனேஷ்வரிக்கு அண்ணாநகர் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது..

இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்… ஒருகட்டத்தில், புவனேஷ்வரிக்கு, அந்த ஆண் நண்பர் அடிக்கடி போன் செய்து பேச ஆரம்பித்தார்.. புவனேஸ்வரும், ஆண் நண்பருடன் போனில் பேசி வந்திருக்கிறார்.


இது நாளடைவில் சுரேஷூக்கு தெரிந்துவிட்டது.. அந்த நண்பருடன் அடிக்கடி மனைவி பேசுவதை பார்த்து சுரேஷ் ஆத்திரமடைந்துள்ளார். ஆண் நண்பருடன் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறு பலமுறை புவனேஸ்வரியை கண்டித்துள்ளார்.

ஆனால், சுரேஷ் கண்டித்தும், எதையுமே புவனேஸ்வரி காதில் போட்டுக் கொள்ளவில்லை.. நேற்றிரவும் வழக்கம்போல், புவனேஷ்வரி அந்த ஆண் நண்பரிடம் பேசி கொண்டிருந்தார்.

இதனால் சுரேஷ் மேலும் கொந்தளித்தார்.. மனைவியை கண்டிக்கவும், இதுவே தகராறாக வெடித்தது.. இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் நீண்டுகொண்டே போனது.. பிறகு, சுரேஷ் தூங்க போய்விட்டார்..

ஆனால், புவனேஷ்வரி மட்டும் அழுதுகொண்டேயிருந்தார்.. மனம்நொந்து போன நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

புவனேஷ்வரியின் அலறல் சத்தம் கேட்டு கணவரும், அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்தனர்.. உடனடியாக தீயை அணைத்து உயிரை காப்பாற்றினர்.. ஆனால், புவனேஷ்வரி படுகாயமடைந்துவிட்டார்..

அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கிறார்கள்.. 50 சதவீத தீக்காயமடைந்த புவனேஷ்வரிக்கு தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆபத்தான நிலையில் புவனேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார் . இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, குமரியில் ஒரு சம்பவம் நடந்தது.. மனைவி அடிக்கடி போனில் பேசி கொண்டே இருந்ததால், தகராறு வெடித்துள்ளது.. இதனால் மனஸ்தாபம் அதிகமாகவும் இருவரும் விவாகரத்திற்கு விண்ணப்பம் செய்தனர். அந்த விவாகரத்து வரும் வரை இவர்கள் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்… அந்த சமயத்தில் மறுபடியும் போனில் பேசி வந்துள்ளார் மனைவி..

இதை பற்றி கணவன் கேட்டதற்கு, அதான் விவாகரத்திற்கு விண்ணப்பித்துவிட்டோமே, நான் யாருடன் பேசினால் உனக்கு என்ன? என்று மனைவி கேட்டுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கொலையே செய்துவிட்டார்.. இந்த சம்பவம் அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது நினைவுகூரத்தக்கது.