
சமீப காலங்களாக மாடல் துறையைச் சேர்ந்தவர்கள், திரையுலகைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் தற்கொலைச் செய்துக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உலக அழகி சான் ரேச்சல் தற்கொலைச் செய்துக் கொண்டது மாடல் துறையினரிடையே பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி சான் ரேச்சல் (25), திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்த நிலையில்,
இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சான் ரேச்சல் டார்க் ஸ்கின் பிரிவில் உலக அழகி பட்டம் பெற்றவர்.
அவர் பேஷன் ஷோக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இதில், ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலைச் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இன்னொரு புறம் சான் ரேச்சல் சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக காராமணிகுப்பத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்நிலையில் பேஷன் ஷோக்கள் நடத்த முயற்சித்ததில் அதிக கடன் சுமை தான் காரணம் என்றும் , கணவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்த தற்கொலையில் காரணம் இல்லை என்றும் ரேச்சல் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து, தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.















