ஊர் ஊராக சுற்றி கள்ளக்காதல் ஜோடி செய்துவந்த மோசமான செயல் : அரங்கேறிய திகில் சம்பவம்!!

883

கன்னியாகுமரி..

கன்னியாகுமரி அருகே அறுமனை பகுதியைச் சேர்ந்த பெட்டிக்கடை நடத்தி வரும் கிறிஸ்டினா என்ற பெண்ணின் கடைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

பழம் வேண்டும் என கிறிஸ்டினாவிடம் கேட்ட அவர்கள் திடீரென மின்தடை ஏற்பட்டபோது அவர் கழுத்தில் அணிந்து இருந்த தங்க நகையை பறித்து விட்டு தப்பினர். அப்போது அந்த பெண்ணின் செருப்பு அங்கேயே விழுந்தது

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தக்கலை பகுதியிலும் ஒரு ஆணும் பெண்ணும் பெண் ஒருவரிடம் நகையை பறித்துச் சென்றனர்.


இதனால் இரு குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என சந்தேகத்த போலீசார் தொடர்ந்து தமிழக கேரளா எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஆணையும் பெண்ணையும் பிடித்து விசாரணை நடத்திய போது இருவரும் கன்னியாகுமரியில் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

மேலும் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும் சில இடங்களில் மிளகாய் பொடி தூவியும் நகையை பறித்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் சதீஷ் என்பவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் பெண் சாந்தகுமாரி கேரள மாநிலம் ஆணை பாறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

சதீஷ் தனது குடும்பத்துடன் வசித்து வந்ததும் சாந்தகுமாரி தனது கணவரை பிரிந்து வசித்து வந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் ஹோட்டலில் பணிபுரிந்த போது ஜவுளிக்கடையில் பணிபுரிந்த சாந்தகுமாரியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதை அடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். வேலைக்கு செல்லாமல் பல இடங்களில் சுற்றி திரிந்ததால் அவர்களுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது.

இதை எடுத்து பணத்துக்காக நகையை தேட முடிவு செய்த அவர்கள் ஊர் சுற்றும் இடங்களில் எல்லாம் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து நகையை பறித்துள்ளனர்.

அப்படித்தான் கிறிஸ்டினா மற்றும் தக்கலை பகுதியில் வசிக்கும் பெண்ணிடம் அவர்கள் நகையை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார்,

அவர்களிடம் இருந்து நகை இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வேறு எங்கெல்லாம் அவர்கள் கைவரிசை காட்டி இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.