எங்களை காப்பாத்துங்க… இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழ் பேராசிரியை கண்ணீர் கோரிக்கை!!

83

இஸ்ரேல்….

இஸ்ரேல் பாலஸ்தீனப்போர் நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேலில் வசித்து வரும் திருச்சியை சேர்ந்த பேராசிரியை ஒருவர் இந்திய அரசிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் “ நாங்கள் வசித்து வரும் இந்த பகுதியில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை குண்டு வீச்சு நடைபெறுகிறது. பயத்தால் பதுங்கு குழியில் வாழ்வதாக கண்ணீர் மல்க கண்ணீருடன் தெரிவித்து உள்ளார்.

இஸ்ரேலில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வேளாண் படிப்பு, ஆராய்ச்சி, பொறியியல், இயற்பியல், வேதியியல் போன்ற உயர்படிப்புகளுக்காக இஸ்ரேல் நாட்டிற்கு பலர் சென்றுள்ளனர்.

இங்குள்ள பல்கலைக்கழகங்கள் பல இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் இஸ்ரேல் நாட்டில் உள்ள 2 வேளாண் பல்கலைக்கழகளுடன் புரிந்துணர்வு செய்து நீர்வள தொழில்நுட்பம், நானோ தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஆய்வு, ரிமோட் சென்சார் (ட்ரோன்) தொழில்நுட்பம் போன்ற ஆய்வுகளுக்காக பல்கலைக்கழகம் சார்பில் இஸ்ரேல் நாட்டிற்கு சென்று வருவது வழக்கம்.

அதன்படி, திருச்சி வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உழவியல் துறை இணை பேராசிரியை ராதிகா, சொட்டு நீர்ப்பாசனம் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள செப்டம்பர் 23ம் தேதி 3 வார பயிற்சிக்காக இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்குரியன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அவர் சென்ற சில நாட்களிலேயே போர் தொடங்கிவிட்டது.

இதனால், அங்கிருந்து வெளியில் வர முடியாத நிலையிலும், தகவல்களை அனுப்ப முடியாத சூழ்நிலையிலும் அவர் இருந்து வருகிறார். தொடர்ந்து வெடிகுண்டுகள், ராக்கெட்டுகளின் சத்தம் கேட்டு வந்தாலும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தனது கணவருக்கு மொபைல் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பேராசிரியை கணவர் ரமேஷ் ” நான் திருச்சி வேளாண்மை பல்கலையில் உழவியல் துறையின் தலைவராக உள்ளேன். என் மனைவி ராதிகா 2 மாத பயிற்சியாக இஸ்ரேல் சென்றார்.

பயிற்சி முடித்து விட்டு அந்த தொழில்நுட்பங்களை இங்கு விவசாயிகள், மாணவர்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், அங்கு பயிற்சி தொடங்கிய சில நாட்களில் இது போன்ற போர் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் இருக்கும் இடத்தில் இருந்து தாக்குதல் நடந்த பகுதி 60 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது.

தொடர்ந்து 5 நிமிடத்திற்கு ஒரு முறை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்பதாக தெரிவித்தார். இஸ்ரேல் அரசு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கும் சமயங்களில் முன்னெச்சரிக்கையாக ‘சைலன்சர்’ ஒலியை எழுப்பும். அப்போது அனைவரும் பாதுகாப்பாக இரும்பு ஷெல்டரில் (பதுங்கு குழி) சென்று தங்கி கொள்வோம். நிலைமை சரியானவுடன் தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

அந்த சமயத்தில் மீண்டும் அறைக்கு வந்துவிடுவோம். தொடர்ந்து குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு கொண்டே இருப்பதால் தனித்தனி அறையில் இருப்பதற்கு பயமாக இருப்பதால், தூங்கும்போது அனைவரும் சேர்ந்து இருக்கிறோம்.ராதிகாவுடன் 10 இந்தியர்கள் உள்ளனர்.

இஸ்ரேலுக்கு பணி, கல்வி, வர்த்தகம் உட்பட பல்வேறு பணிகளுக்கு சென்ற சென்னை மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பலர் இஸ்ரேலில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மத்திய , மாநில அரசுகள் ஒன்றிணைந்து மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.