லூடோ கேமில்….

இந்த கொரோனா சமயத்தில் உலகம் முழுக்க ஆன்லைன் கேம் விளையாட்டுகள் விளையாடுவதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதுவும், இந்தக் கொரோனா சூழலில் அதிக மக்களால் விளையாடப்பட்டும் கேம் என்றால் பப்ஜி, போன்ற விளையாட்டுகளுக்கு அடுத்து, லுடோ கிங் கேம்தான். உலகம் முழுக்க 300 மில்லியன் மக்கள் இந்த கேமை டவுன்லோடு செய்திருக்கிறார்கள்.

ஏற்கனவே, இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இந்தியாவில் மனைவி ஒருவர் தொடர்ச்சியாக கணவனை லூடோவில் தோற்கடித்ததால் இரவு முழுக்க அடித்து கணவர் சித்திரவதை செய்த சம்பவமும்.
லூடோ விளையாடும்போது தொந்தரவு செய்தவரை நண்பரே சுட்டுக்கொன்ற சம்பவமும்,

லூடோ விளையாட்டில் சேர்த்துக் கொள்ளாததால் தனது அக்கா மீது காவல்நிலையத்தில் சிறுவன் புகார் அளித்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியதியிருந்தது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், போபால் குடும்ப நீதிமன்றத்தில் “நான் எனது தந்தையை மிகவும் நம்புகிறேன். ஆனால், அவர் லூடோ கேமில் என்னை ஏமாற்றுவார் என்று எதிர்பார்க்கவில்லை” என்று வழக்குத் தொடுத்துள்ளார்.
















