என்னமா பிளான் பண்றீங்க… காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்த பாசக்கார மனைவி!!

1188

புதுச்சேரியில்..

புதுச்சேரியில் மூலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். சுமை தூக்கம் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு ஜெனவாமேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு எட்டு வயது மகள், ஐந்து வயது மகன் உள்ளனர். பிரான்சிஸ் மார்ச் 4ஆம் தேதி அன்று இரவு மதுபானம் அருந்திவிட்டு வீட்டில் படுத்து உள்ளார்.

அதிகாலை திடீரென பிரான்சிஸ் இடுப்பு பகுதிக்கு கீழ் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதனை கண்ட அவரது மனைவி சத்தம் போட்டு உள்ளார். வலி தாங்க முடியாமல் கதறிய பிரான்சிஸ் தன் மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டு தீயை அணைத்துள்ளார்.

டீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரான்சிஸ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஜெனவாமேரியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


அப்போது அவர், அடையாளம் தெரியாத இரண்டு பேரும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு சென்றதாக கூறினார். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த பிரான்சிஸ் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

மேலும் விசாரணையில், பிரான்சிஸ் மனைவி ஜெனவாமேரி தனது காதலன் கணேஷ் உதவியுடன் கணவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு அடையாளம் தெரியாத நபர்கள் செய்ததாக கூறியது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்,” ஹோம் நர்சாக ஜெனவாமேரி பணியாற்றி வருகிறார். மூலக்குளம் பகுதி சேர்ந்த கணேஷ் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

இரவு நேரங்களில் ஜெனவா மொபைல் போனை பேசுவது குறித்து கணவர் பிரான்சிஸ் கண்டித்துள்ளார். கடந்த வாரம் இரவு நேரத்தில் வெகு நேரம் செல்போனில் பேசியதால் மனைவியை பிரான்சிஸ் அடித்துள்ளார்.

இதுகுறித்து காதலன் கணேஷிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் தொல்லையாக இருக்கும் பிரான்சிஸை பெட்ரோல் ஊற்றிக் கொள்ள இருவரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி மார்ச் 4ஆம் தேதி அன்று இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கி ஜெனவாவிடம் கொடுத்துள்ளார் கணேஷ்.

அன்று இரவு மது போதைகள் தூங்கிய பிரான்சிஸ் மீது பெட்ரோல் ஊற்றி மனைவி தீ வைத்துள்ளார். பின்னர் அலறி துடித்து பிரான்சிஸ் சத்தம் எழுப்பிய காரணத்தினால் அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். உடனே அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ வீட்டுக்குள் வந்து பெட்ரோல் ஊற்றி எடுத்து விட்டுச் சென்றதாக அவர் நாடகமாடியுள்ளார்” என தெரிவித்தனர்.

தற்போது ஜெனவா மேரி மற்றும் அவருடைய காதன் கணேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி உள்ளனர். தற்போது இருவரும் காலப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.