என்னை எல்லோரும் ஏமாத்துறாங்க.. குப்புறப்படுத்து குமுறி குமுறி அழும் விஜய் சேதுபதி!

618

விஜய் சேதுபதியின் பாடு தமிழ் சினிமாவில் திண்டாட்டமாக இருக்கிறது. நடிக்கும் படங்களும் ஓடுவதில்லை, பத்தாததுக்கு கெஸ்ட் ரோலில் நடித்தால் அதை வைத்தே விளம்பரப்படுத்தி வருகிறார்கள் என்ற கவலை.

விஜய் சேதுபதியின் படங்கள் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறுவதில்லை. இதனால் அடுத்தடுத்த அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் வரிசை கட்டி நின்றாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை.

எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்துவிட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார். காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள விவசாயி படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.


அதேபோல் சொந்த தயாரிப்பில் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் ரெடியாக உள்ள லாபம் படத்தையும் எதிர்பார்த்து காத்துள்ளார். ஆனால் எதுவுமே நினைத்த அளவு வியாபாரம் ஆகவில்லையாம். மலையாளத்தில் ஜெயராம் நடிப்பில் உருவான மார்கோனி மேதை எனும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அந்த படத்தை தற்போது தமிழில் டப் செய்து வெளியிட வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த காட்சிகளை வைத்து இது விஜய் சேதுபதி படம் தான் என்பதை போல தமிழில் வியாபாரம் செய்து வருகிறார்களாம். ஏற்கனவே கடுப்பில் இருக்கும் விஜய் சேதுபதிக்கு இது பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இதனால் இனி கெஸ்ட் ரோலில் நடிக்க போவதில்லை என முடிவு செய்துவிட்டாராம். நம்பியவர்களே இப்படி ஏமாற்றுகிறார்கள் என செம அப்செட்டில் இருக்கிறார் விஜய் சேதுபதி.