என் மகன் கட்டடத்திலிருந்து குதித்தார் : விமான விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியவரின் தாய்!!

1033

ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விடுதி கட்டிடத்திலிருந்து நூலிழையில் தனது மகன் உயிர் தப்பித்ததை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார்.

நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது.

இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விடுதி கட்டிடத்திலிருந்து நூலிழையில் தனது மகன் உயிர் தப்பித்ததை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார்.

அவர் கூறுகையில் “எனது மகன் மதிய உணவு இடைவேளையின் போது விடுதிக்குச் சென்றிருந்தார். விமானம் அங்கே விபத்துக்குள்ளானது. என் மகன் பாதுகாப்பாக இருக்கிறார், நான் அவனிடம் பேசியுள்ளேன்.


அவன் இரண்டாவது மாடியில் இருந்து குதித்தான், அதனால் அவனுக்கு சில காயங்கள் ஏற்பட்டன” என்று ரமிலாபென் கூறினார்.

மேலும், தீயில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பலரும் கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து கீழே குதித்ததாக நேரில் பார்த்த பலர் பகிர்ந்து கொண்டனர்.