என் மகளைக் கொன்றவனுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் : மாணவியின் தந்தை கதறல்!!!

502

டெல்லி….

டெல்லியைச் சேர்ந்த நர்கீஸ் (25) என்னும் இளம்பெண்ணும் இர்ஃபான் (28) என்னும் இளைஞரும் பழகிவந்த நிலையில், இர்ஃபானுக்கு சரியான வேலையில்லாததால், அவருக்கு நர்கீசை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நர்கீஸ் இர்ஃபானுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த இர்ஃபாம் சில நாட்களாக திட்டமிட்டு, நர்கீசுடைய கல்லூரிக்கு அருகிலுள்ள ஒரு பூங்காவில் வைத்து அவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில், தன்னுடைய ஒரே மகளை இர்ஃபான் கொன்றுவிட்டதாக கூறியுள்ள நர்கீசின் தந்தை இர்ஃபானுக்கு மரண தண்டனையளிக்கவேண்டும் என கோரியுள்ளார்.


எனக்கு ஒரே ஒரு மகள், அவளை அவன் கொன்றுவிட்டான், அவனுக்கு மரண தண்டனையளிக்கவேண்டும், அவனை நான் விடமாட்டேன் என நர்கீசின் தந்தை கண்ணீருடன் கதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.