எப்ப பார்த்தாலும் ஆபாசமா வீடியோ.. காதலியைக் கொன்று உடலை எரித்த காதலன்!!

571

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் யாத்கிர் அருகே அரகேரா கிராமத்தின் ஒதுக்குபுறமான இடத்தில் தீயில் எரிந்த நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்துள்ளது. கடந்த 2ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்பெண்ணின் அடையாளம் கூட தெரியாத நிலையில் இருந்ததால் போலீசாருக்கு தடயங்கள் கிடைக்கவில்லை.

தொடர் விசாரணைக்கு பிறகு, இறந்த இளம்பெண் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பண்டேலா வர்மா (25) என்பதும், மும்பையில் தனது சகோதரருடன் வசித்ததும் தெரிய வந்தது. மேலும் யாத்கிரை சேர்ந்த மாருதி ரத்தோர் (27) என்பவரை அப்பெண் காதலித்ததும் தெரிந்தது.

இதனையடுத்து இளம்பெண்ணின் காதலர், சகோதரர் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாருதி ரத்தோர் ஆற்றில் குதித்து, தற்கொலை செய்து கொள்வது போன்ற ஒரு வீடியோ, குர்மித்கல் போலீசாருக்கு கிடைத்தது. போலீசார் விசாரித்த போது, தற்கொலை செய்யவில்லை என்பது தெரியவந்தது.


இந்த நிலையில் யாத்கிர் புறநகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த, மாருதி ரத்தோரை நேற்று முன்தினம் போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில், பண்டேலா வர்மா என்ற பெண்ணை கழுத்தை நெரித்து கொன்று, உடலை தீ வைத்து எரித்ததை ஒப்புக்கொண்டார். இதனால் கைதானார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

மாருதி ரத்தோர் மும்பையில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது பண்டேலாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நெருக்கமானதால் இருவரும் காதலித்தனர். பண்டேலா, ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். இதனால் சமூக வலைதளம் மூலம் அவருக்கு பல ஆண் நண்பர்கள் பழக்கம் அதிகரித்தது.

இதனால் தன்னை விட்டு பிரிந்து விடுவார் என மாருதி பயந்தார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி, மும்பையில் இருந்து யாத்கிருக்கு அழைத்து வந்தார். பேருந்தில் வரும் போது ரீல்ஸ் வீடியோ எடுப்பதை கைவிடும் படியும், தன்னை திருமணம் செய்யுதுக் கொள்ளும்படியும் கேட்டு உள்ளார். ஆனால் பண்டேலா திருமணத்திற்கு மறுத்ததோடு இல்லாமல், ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை நிறுத்தவும் மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாருதி, அரகேரா கிராமத்திற்கு அழைத்து சென்று காதலியின் கழுத்தை நெரித்து கொலைச் செய்தார். அதன் பின்னர் காதலியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தார். போலீசில் சிக்காமல் இருக்க, ஆற்றில் குதித்து தற்கொலை செய்தது போல, வீடியோ எடுத்து வெளியிட்டதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.