எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கூடிய கூட்டத்தை பயன்படுத்தி நடந்துள்ள சம்பவம்! விசாரணை நடத்தும் பொலிசார்!!

582

செல்போன்களை…….

எஸ்பிபி இறுதிச்சடங்கில் கூடிய கூட்டத்தை பயன்படுத்தி 5 பேரின் செல்போன்களை திருடர்கள் திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்த எஸ்பிபியின் உடல் சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் வைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

பின்னர், இந்து முறைப்படி எஸ்.பி.பி.சரண் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அப்போது ஏராளமான கூட்டம் கூட்டியிருந்தது.


அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் செல்போன் உள்பட 5 பேரின் செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களின் செல்போன் உள்ளிட்ட இறுதி அஞ்சலியில் பங்கேற்க வந்தவர்களிடம் கைவரிசையை காட்டியதாக‌ சந்தேகத்தின்பேரில் 12 பேரை‌ பிடித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.