
பணத்தாசை யாரை விட்டு வெச்சிருக்கு? இந்த நாட்டில் ஆண்களின் பணத்தாசைக்கு அதிகாரி மகளாக இருந்தால் என்ன? சாதாரண நடுத்தர குடும்பத்தினரின் மகளாக இருந்தால் என்ன?
ஆனால் பெரும்பாலான சம்பவங்களில் பணக்காரர்களின் மகள்களைத் திருமணம் செய்பவர்களே அதிகமாக வரதட்சணைக் கேட்டு தொல்லைக் கொடுத்து, தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு பெண்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள் என்பது ஆய்வு அறிக்கை.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகள் ஒருவர், திருமணமான சில மாதங்களிலேயே கணவரின் வரதட்சணைக் கொடுமை மற்றும் புறக்கணிப்பால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தடிப்பல்லியைச் சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சின்னராமுடு. இவரது மகள் மதுரி சஹிதிபாய் (27). மதுரி, நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரைக் காதலித்து கடந்த மார்ச் மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான சில மாதங்களிலேயே ராஜேஷ், மதுரியிடம் வரதட்சணை கேட்டுத் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மதுரி, கடந்த அக்டோபர் மாதம் தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து கணவன் ராஜேஷ் வரதட்சணைக் கொடுமை செய்ததாலும், அவர் தன்னை உண்மையாகக் காதலிக்கவில்லை என்ற சந்தேகத்தாலும், தன்னை மீண்டும் அழைத்துச் செல்ல வரவில்லை என்ற மன வேதனையாலும் மதுரி பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று மதுரி தனது பெற்றோர் வீட்டில் உள்ள கழிவறையில் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், மதுரியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.















