ஒன்றிணைவோம்.. மாணவர்களோடு துணை நிற்போம்.. நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ!!

697

நீட் தேர்வு…..

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து நடிகர் சூர்யா நேற்று ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் , “நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை உலுக்குகிறது.

மாணவர்களுக்கு வாழ்த்துச் சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் தங்கள் தகுதியை நிரூபிக்க தேர்வெழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

சமமான வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் கல்விமுறையை சட்டமாக கொண்டு வருகிறது.


கொரோனா அச்சத்தால் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வெழுத உத்தரவிடுகிறது.” என்று நடிகர் சூர்யா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் உங்கள் சூர்யா பேசுறேன். ஒருத்தர் படிச்சா அந்த வீடு மாறும். ஒவ்வொருத்தரும் படிச்சா அந்த நாடே மாறும்.

இந்த பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்கள் கல்வியை பாதியில் கைவிட்டுவிட்டார்கள். நாம் நினைத்தால் அதை மாற்றலாம் என அவர் தெரிவித்துள்ளார்.