“ஒரு தாய்க்கு இதைவிட வேற என்ன வேணும்”.. தமிழக கால்பந்தாட்ட வீராங்கனையின் உருக்கமான பதிவு!!

729

சந்தியா ரங்கநாதன்..

இந்திய கால்பந்தாட்ட வீராங்கனையான சந்தியா ரங்கநாதன், தனது தாயார் குறித்து உருக்கத்துடன் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் சென்னையில் வைத்து நடந்த கால்பந்து போட்டியில், தாயார் முன்பு இந்திய கால்பந்தாட்ட வீராங்கனையும், தமிழ்நாட்டை சேர்ந்த சந்தியா ரங்கநாதனும் விளையாடி உள்ளதாக தெரிகிறது.

தான் விளையாடியதை நேரில் பார்க்க தாயார் வருகை தந்ததால் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்து போயுள்ளார் சந்தியா ரங்கநாதன். இந்த நிலையில், தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த சந்தியா ரங்கநாதன்,


“இன்று நான் நானாக இருப்பதற்கு அவர் (தாயார்) தான் காரணம். இரண்டு மகள்களின் சிங்கிள் தாயாக அவருடைய வாழ்க்கை அத்தனை எளிதானதாக இல்லை.

ஆனால், எங்களுக்கு சிறந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எனக்கு மிக ஆதரவாக இருந்த வலிமையான தூண் அவர்.

இறுதியாக நான் நாட்டுக்காக விளையாடியதை அவர் நேரில் பார்த்ததை மிக பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். என்னோட அம்மா, என்னோட ஹீரோ” என மிக உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தாயாக, இரண்டு மகள்களை கஷ்டப்பட்டு உயர வைத்து, கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் ஒரு மகளை உருவாக்கி உள்ள தாயை மக்கள் பலரும் நெகிழ்ந்து போய் பாராட்டியும் வருகின்றனர்.