ஒரே ஒரு பதிவால் முடிந்த வாழ்க்கை.. தவறான கருத்தை பரப்பிய இன்ஸ்டா பிரபலம் காருக்குள் வைத்து கொலை!!

195

பஞ்சாப் மாநிலம் லூதியான பகுதியை சேர்ந்தவர் 25 வயதான கமல் கவுர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

கமல் கவுர் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் சமூகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை பற்றி பேசி கருத்து விடுவது என சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வந்துள்ளார்.

இவரது வீடியோக்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்தாலும் அதே சமயம் அதிகமான எதிர்ப்புகளும் இருந்து வந்துள்ளது, சமீபத்தில் இவர் ஒரு ரவுடி பற்றி பேசி பதிவிட்டிருந்தார். அதற்கு அந்த ரவுடி இவரை மிரட்டியுள்ளார்.

மேலும் ஒரு தீவிரவாத அமைப்பை பற்றி பேசி பதிவிட்டதற்கும் எதிர்ப்பு கிளம்பி இருந்ததுள்ளது.

இந்நிலையில் கமல் கவுர் தனது வலைதள பக்கத்தில் சிக்கிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை பேசி பதிவிட்டுள்ளார். இது சிக்கிய மதத்தை முழுமையாக பின்பற்றி வந்த ஜஸ்பிரித் மற்றும் நிம்ராஜ் என்ற இருவரை காயப்படுத்தியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அந்த பதிவை நீக்க கோரி கமல் கவுர் இடம் கேட்டுள்ளனர். ஆனால் கமல் கவுர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.


எனவே இருவரும் தங்களது மதத்தையும், கொள்கையையும் தவறாக பேசிய கமல் கவுரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியர்களாக கமல் கவுரை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வர வேண்டும் என்று அழைத்துள்ளனர்.

இதை உண்மை என நம்பிய கமல் கவுரி நிகழ்ச்சிக்கு வர ஒப்புதல் அளித்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு அழைத்து வர இருவரும் கமல் கவுரி வீட்டுக்கு கார் அனுப்பியுள்ளனர். அதை மறுத்து தனது காரில் வருவதாக கமல் கவுரி கூறிவிட்டு தனது காரில் நிகழ்ச்சி நடப்பதாக சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார்.

வழியிலே கமல் கவுரியின் காரை மறித்து ஜஸ்பிரித் மற்றும் நிம்ராஜ் அவரது காருக்குள் சென்று கமல் கவுரியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

பின்னர் கவுரியின் உடலை எங்கு புதைப்பது என்று தெரியாமல் காரிலேயே வைத்து சுற்றியுள்ளனர். ஒரு தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அருகில் காரை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆகியும் கார் அதே இடத்தில் நின்றிருப்பதை பார்த்த அப்பகுதியில் கடை வைத்திருக்கும் ஒருவர் காரின் அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது காரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இது குறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது பெண்ணின் அழுகிய சடலம் இருந்துள்ளது.

அதை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் இறந்தது கமல் கவுரி என்றும் சிக்கிய மதத்தை பற்றி தவறான கருத்து பரப்பியதற்காக ஜஸ்பிரித் மற்றும் நிம்ராஜ் இருவரால் கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.