
இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் தளங்களில் லைக்ஸ்களைக் குவிக்கவும், வியூவ்களை அள்ளவும் ரீல்ஸ் மோகத்தில் உயிரைப் பணயம் வைத்து இன்றைய தலைமுறை சாகசங்களைச் செய்து வீடியோக்களாக பதிவு செய்கிறார்கள்.
சமூக ஊடகங்களின் தாக்கத்தால் தீண்டப்படாமல் இருப்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.
பாதுகாப்பு விதிகள் மற்றும் டிஜிட்டல் நெட்வொர்க் போக்குகள் குறித்த விவாதத்தை எழுப்பும் இதுபோன்ற பயங்கரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் பெட்டியின் விளிம்பில் நின்றுக் கொண்டு இளம்பெண் ஒருவர் உற்சாகமாக ரசித்து நடனமாடிக் கொண்டிருக்கிறார். இந்த ஸ்டண்டை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலில் இருந்து கீழே விழுந்து இறந்தால், அவரது குடும்பத்தினர் இந்திய ரயில்வே மற்றும் ரயில் அமைச்சர் மீது பழி சுமத்துவார்கள்.
மேலும் அரசாங்கத்திடமிருந்து பெரும் இழப்பீடும் கூட வாங்குவார்கள். அத்தகையவர்களை கண்டுபிடித்து அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபலமான அந்த வீடியோவில், அந்த இளம்பெண் ஓடும் ரயிலைப் பற்றி பயப்படாமல், சமூக வலைதளங்களில் ரீல் தயாரிப்பதில் முழு ஈடுபாட்டுடன் இருக்கிறார். பாதுகாப்பாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஸ்டண்ட் செய்வது மிகவும் ஆபத்தானது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்து அந்த பெண்ணை திட்டி வருகின்றனர். அவள் முதலில் தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராஜஸ்தானின் கோட்டாவில் ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது, ரீல் தயாரிக்கும் போது ஒருவர் தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
அந்த நபர் யஷ்வந்த் நகர் என்ற 22 வயது இளங்கலை பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக போலீசார் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக ஊடகப் பார்வைகள் மற்றும் பிரபலத்திற்கான இந்த ஸ்டண்ட் செயல்கள் ஆபத்தாகவும் சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் இருக்கலாம்.
எனவே, எந்தவொரு நிகழ்வையும் பதிவு செய்யும் போது அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் மற்றும் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
Making Reel is more important than life !!
If she fall down from the train and die, her family will blame Indian Railways and Rail Minister @AshwiniVaishnaw for the same and will even take heavy compensation from the govt .
Such people must be found and fined plus jailed… pic.twitter.com/CXkJU1HGKj
— Amitabh Chaudhary (@MithilaWaala) June 20, 2024















