கணவனின் நடை உடை பாவனையில் ஏற்பட்ட மாற்றம்! உண்மையை கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்த மனைவி..!

844

இந்தியாவில் திருமணமான 7 ஆண்டில் திருநங்கையாக கணவன் மாறியதால் அதிர்ச்சியடைந்த மனைவி விவாகரத்து கோரிய நிலையில் தற்போது பரஸ்பர சம்மதத்துடன் இருவரும் மக்கள் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரை சேர்ந்த நபருக்கும், இளம்பெண்ணுக்கு கடந்த 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் கடந்த 2014ல் கணவன் திருநங்கையாக மாறியுள்ளார்.

ஆனால் இதை முதலில் அறிந்திடாத மனைவி பின்னர் அவர் நடை உடை பாவனையில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து திருநங்கையாக கணவர் மாறியதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது, குடும்பத்தார் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் முடியாத நிலையில் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினர்.


இந்த விசித்திர வழக்கு நீதிமன்றத்தில் ஆண்டுக்கணக்கில் நடந்து வந்த நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்கும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சென்றது.

அங்கு நீதிபதி மகேந்திர குமார் முன்னிலையில் கணவன், மனைவி ஆஜரானார்கள். விசாரணைக்கு பிறகு பரஸ்பர சம்மதத்துடன் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.