கணவனுக்கு நீடா அம்பானி வைத்த விஷப் பரீட்சை.. சாலையோரங்களில் நடந்த காதல் தொல்லை.. சுவாரஸ்ய கதை!!

760

நீடா அம்பானி..

நீடா – முகேஸ் அம்பானியை எப்படி திருமணம் செய்தார் என்ற காதல் கதை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருக்கும் கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி தான் முதல் இடத்தில் இருக்கிறார். போர்ப்ஸ் பத்திரிக்கை வழங்கும் தகவலின் படி உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 13வது இடத்தில் தக்க வைத்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பை கணக்கெடுத்து பார்த்த போது $94.7 பில்லியன் இருந்தது என தெரியவந்துள்ளது.

இவ்வளவு சிறப்புமிக்க இராட்சியத்தை ஆளும் முகேஷ் அம்பானியின் திருமண வாழ்க்கையை எடுத்து பார்த்தால் அதில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் ஒளிந்திருக்கின்றது. அந்த வகையில் முகேஷ் அம்பானி கடந்த 1985 ஆம் நீடா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


மும்பையில் ஒரு நவராத்திரி விழாவில் நடனமாடிய போது நீடாவின் நடனத்தைக் கண்டு பிரமித்துப் போன திருபாய் அம்பானி தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து நீடாவிற்கும் முகேஷ் அம்பானிக்கும் காதல் மலர்ந்துள்ளது. சொகுசு வாழ்க்கையில் ஊறி போயிருந்த முகேஷ் அம்பானிக்கு நீடா பல பரீட்சைகளை வைத்துள்ளார். ஏனெனின் சாதாரண வாழ்க்கை முகேஷ் அம்பானிக்கு வாழ முடியுமா? என நீடா சோதனை செய்துள்ளார்.

இதன்படி, முகேஷ் அம்பானியை சாலையோரக்கடைக்களுக்கு எல்லாம் காதலிக்கும் காலங்களில் கூட்டிச் சென்றுள்ளாராம். சிறிது காலம் சென்றதும் முகேஷ் அம்பானியின் கொள்ளைகள் நீடாவிற்கு பிடித்து போயுள்ளது.

இதன் பின்னர் இருவரும் மண வாழ்க்கைக்குள் சென்றுள்ளார்கள். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகிய போது பலரும் நீடா அம்பானி சாதாரண குடும்பத்து பெண்ணா? என அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.