கணவனும் வேணும், ஆசை காதலனும் வேணும்.. பொலிஸ் நிலையத்தில் அராஜகம் செய்த பெண்!!

655

இந்தியாவில்..

இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி மாவட்டத்தில் சிர்காவ் என்ற கிராமத்தில் வசித்து வந்த பெண் ஒருவர் பக்கத்து கிராமத்தில் வசித்து வந்த இளைஞன் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார்.

 இந்தப் பெண் காதலிப்பதை தெரிந்துக்கொண்ட பெற்றோர்கள், இவருக்கு அவசர அவசரமாக ஒரு மாப்பிள்ளைப் பார்த்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.  இந்தப் பெண்ணும் அந்த மாப்பிள்ளை திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு திடீரென பக்கத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஓடியிருக்கிறார். பொலிஸ் நிலையத்தில் போய் தன்னை தனது காதலனுடன் சேர்த்து வையுங்கள் என அடம்பிடித்துள்ளனர்.


இவரை கட்டுப்படுத்த பெண்பொலிஸார் முயன்றும் முட்டுக் கொடுக்காமல் பொலிஸ் நிலையத்தை இரண்டாக்கி விட்டார். கொஞ்ச நேரத்தில் சமாதானமான அந்தப் பெண் நான் இருவரையும் திருமணம் செய்துக் கொள்ளுகிறேன்.

எனக்கு நான் ஆசையாக காதலனும் வேணும் , தாலி கட்டிய கணவனும் வேண்டும் என சொல்லிவிட்டு ஆத்திரத்தில் கையில் இருந்த போனையும் அடித்து உடைத்திருக்கிறார்.

இறுதியில் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் அதிகாரி வரவே அந்தப் பெண்ணை அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்திருக்கிறார். இது போதாதென்று அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட மாப்பிள்ளை,

என் மனைவி அவருடைய காதலனையும் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அங்குள்ளவர்கள் மிகவும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும், அவர் பொலிஸ் நிலையத்தில் சண்டைப் போட்ட வீடியோ காட்சி தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.