கணவரை பிரிந்து வேறு நபரை ரகசிய திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! உதவாமல் வீடியோ எடுத்த கொடூரம்!!

546

தமிழகத்தில் சாலையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த போது அதை பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலில் உள்ள கேசிபட்டியில் சாலை அருகிலுள்ள டீ கடை பக்கத்தில் வந்த இளம்பெண் தன் உடலின் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீவைத்து கொள்ள முயன்றார். அப்போது டீ கடையில் டீ குடித்தவர்கள் உட்பட சாலையில் நடந்து சென்ற எவரும் அவரை கண்டுகொள்ளவில்லை.

அழுத கண்ணீருடன் சேலையின் முந்தானையை தீ வைத்துக் கொண்ட அந்த இளம்பெண் சற்று நேரத்தில் உடலெல்லாம் தீ பரவிய நிலையில் வலியில் காப்பாற்றுங்கள் என அலறியபடி சாலையில் உருண்டார்.

அப்பொழுது கூட சிறு சலனம் கூட இல்லாமல் சாலையில் மனிதநேயத்தின் கண்களை கறுப்பு துணியால் கட்டியதைப்போல் திரும்பிக் கூட பார்க்காமல் சென்றது பல மனித தலைகள்.


அப்போது ஒருவர் மட்டும் பதைபதைத்து ஓடிவந்து கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து தீயை அணைக்க முற்பட, சற்று நேரத்தில் அந்த இடம் பரபரப்பாகியது. ஆனாலும் அடுத்த நிமிடத்திலேயே முழுவதுமாக எரிந்து உயிரை விட்டார் அந்த இளம்பெண்.

இதில் மிகவும் கொடுமையான விடயம் என்னவென்றால் இந்த சம்பவத்தை சிலர் எந்த ஒரு சலனமும் இன்றி, வீடியோ எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் மாலதி என்பதும், கணவரை பிரிந்து வாழ்பவர் என்றும் தெரியவந்தது.

அவருக்கு 6 வயதில் மகன் இருந்த நிலையில், ஓட்டுநர் சதீஷ் என்பவர் மாலதியை காதலித்துள்ளார். பெற்றோர்களுக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் பெற்றோர் பார்த்த வேறொரு பெண்ணை ஓட்டுனர் சதீஷ் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தகவலை அறிந்த மாலதி நியாயம் கேட்டு சதீஷின் வீட்டுக்கு சென்ற போது அவரின் உறவினர்கள் மாலதியை அடித்துத் துரத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.