கண்ணாம்பூச்சி விளையாட சென்ற 3ம் வகுப்பு சிறுமி… வீட்டிற்கு வந்து வயிறு வலியால் அவதி! நடுநடுங்க வைத்த உண்மை!!

727

திரிபுராவில் கண்ணாம்பூச்சி விளையாடச் சென்ற சிறுமி வீட்டிற்கு வந்து வயிறு வலியால் துடித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 3ம் வகுப்பு சிறுமி ஒருவர் வீட்டிற்கு அருகில் இருந்த அண்ணன்களும்,சிறுவர்களும் கண்ணாம்பூச்சி விளையாட அழைத்ததால் அவர்களுடன் விளையாடச் சென்றுள்ளார்.

அப்பொழுது மறைவான பகுதியில் விளையாடிய போது குறித்த சிறுமி 6 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். பின்பு வீட்டிற்கு வந்து வயிறு வலியால் துடித்ததால் பெற்றோர்கள் விசாரித்ததில் தனக்கு நடந்த கொடுமையினை விளக்கியுள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவுயெ்யப்பட்டு 6 பேரைக் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாகியிருக்கும் ஒருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 4 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பியுள்ளதோடு, மீதம் இருந்த இரண்டு பேருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்பதும் தெரியவந்துள்ளது.

நம்பி விளையாடச் சென்ற சிறுமிக்கு நடந்துள்ள இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.