கதறித் துடித்த மகன்… கள்ளக்காதலியை குத்தி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த நபர்!!

646

சேலத்தில்..

சேலம் மாவட்டம் கருப்பனூர் அம்மன் கோயில் பகுதியில் எடப்பாடியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி அமுதா. இவருக்கு ஒரு மகள் , 2 மகன்கள்.

அமுதாவிற்கும் பெரியபுதூர் வன்னியர் நகரில் வசித்து வரும் தங்கராஜுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இது குறித்து அரசல் புரசலாக அறிந்ததும் பழனிச்சாமி அமுதாவை கண்டித்துள்ளார்.

ஆனால் அமுதா இதற்கெல்லாம் அந்த பழக்கத்தை விடத் தயாராக இல்லை. இதனால் பழனிச்சாமி மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து எடப்பாடிக்கு சென்று விட்டார். இதையடுத்து அமுதா, குழந்தைகள் மற்றும் தங்கராஜூடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே அமுதாவின் மகள் மற்றும் ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது. அவர்கள் இருவரும் அருகில் அவரவர் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மற்றொரு மகன் பிரகாஷ் அமுதாவுடன் வசித்து வருகிறார்.


இவர் கார்மென்ட்ஸில் பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் இரவு பிரகாஷ் பணிக்குச் சென்று விட்டார். நேற்று காலை பணியை முடித்து விட்டு வீடு திரும்பியபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அவர் கதவை நீண்டநேரமாக தட்டியும் தாய் அமுதா திறக்கவில்லை.

சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது அங்கு ரத்தவெள்ளத்தில் அமுதா கொலை செய்யப்பட்டு இடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு அருகே தங்கராஜூம் இறந்து கிடந்தார்.

அவர் அலறித்துடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அமுதா, தங்கராஜின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், தங்கராஜ் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். கடன் கொடுத்தவர்கள் திரும்ப திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

அமுதாவும் கடன் வாங்கியிருந்தார். இது குறித்து 2 நாட்களாக அமுதாவுக்கும் தங்கராஜிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பாதித்த பணத்தை எல்லாம் உன்னிடம்தான் கொடுத்தேன், என்னையே எதிர்த்து பேசுகிறாயா? என கூறி தகராறு உருவானது.

இதனையடுத்து தங்கராஜ் அமுதாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கத்தி மற்றும் விஷ பாட்டிலுடன் தங்கராஜ் இரவு வீட்டுக்கு வந்துள்ளார். மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், அமுதாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தங்கராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.