கதவில் ரத்தத்தில் ‘ஐ’ குறியீடு… தம்பதி கொடூர கொலை : பதறவைத்த சம்பவம்!!

715

திருச்சி..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பி.மேட்டூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அதேபகுதியைச் சேர்ந்த சாரதா என்ற உறவுக்கார பெண்ணை ராஜ்குமார் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

உப்பிலியபுரம் அருகே உள்ள ஷோபனாபுரத்தில் விஜயசேகரன் என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து ராஜ்குமார் விவசாயம் செய்து வந்தார். வயலின் நடுவே உள்ள வீட்டில் ராஜ்குமார் – சாரதா தம்பதி வசித்து வந்தனர்.

கடந்த மூன்றாம் தேதி, தம்பதி வீட்டு வாசலில், கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலையில் அங்கு வந்த மர்ம நபர்கள், கணவன் மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி, கொடூரமான முறையில் கொலை செய்தனர்.


இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ராஜ்குமார்- சாரதாவின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரித்ததில் இதுவரை எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

சம்பவ இடத்திற்கு அருகே உள்ள ஒன்றிரண்டு சிசிடிவி கேமிராக்களின் காட்சிகளும், வழக்கு விசாரணைக்குப் பலன் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. தம்பதியைக் கொலை செய்தது யார்? எதற்காகக் கொலை செய்தார்கள் என்ற கேள்விகளுக்கு, விடை தெரியாமல் மர்மமாகவே உள்ளது

இதற்கிடையே, தம்பதி வசித்து வந்த வீட்டின் கதவில், ‘ஐ’ என்ற ஆங்கில எழுத்து ரத்தத்தில் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியை கொலை செய்துவிட்டு அவர்களின் ரத்தத்தில் ஐ குறியீட்டை எழுதிச் சென்றார்களா ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஆழமாக எழுந்துள்ளது.

கொலை வழக்கில் முக்கிய அடையாளமாக, இந்த ஐ குறியீட்டைக் கருதி, போலீசார் தடயவியல் வல்லுநர்களின் உதவியுடன் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கொலை செய்துவிட்டு, இதே பாணியில் அடையாளக் குறியிடும் கொலையாளிகள் குறித்த விபரங்களை, போலீசார் திரட்டி வருகின்றனர்.

‘ஐ’ என்ற ஒற்றை தமிழ்ச் சொல், ஆச்சரியம், ஐந்து, ஐயம் உள்ளிட்ட அர்த்தங்களைக் குறிக்கும். நிஜத்தில் சீரியல் கில்லர்களும், சைக்கோ கொலையாளிகளும், கொலைக்கு அடையாளமாக சில குறியீடுகளை, விட்டு செல்வது வழக்கம்.

அதே பாணியில் தற்போது ராஜ்குமார்-சாரதா தம்பதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. உண்மையான குற்றவாளிகள் சிக்கினால் மட்டுமே இரட்டை கொலைக்கும், இந்த ஐ குடியீட்டிருற்கும் இடையே உள்ள தொடர்பு என் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.