கர்ப்பமான ப்ளஸ் 1 மாணவி…. சிக்கிய கல்லூரி மாணவன்.. நிலை குலைந்த பெற்றோர்!!

853

கடலூர்..

கடலூர் நகர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், கடலூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அதன்பின்னர் அடிக்கடி சந்தித்த இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டனர். செல்போனில் பேசிவந்த இருவருக்கும் இடையே காதல் உண்டானது. அதன்பின்னர் நேரில் சந்தித்து பழகி வந்தனர்.

இந்த நிலையில், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில், காதலன் அங்கு சென்றுள்ளார். இந்த நேரங்களில் எல்லாம் மாணவர் சென்று மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.


இது தொடர்கதையான நிலையில் அந்த மாணவி கர்ப்பமானார். ஆனால் இது சிறுமிக்கு தெரியாத நிலையில் பெற்றோரும் கவனிக்கவில்லை. தற்போது சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது,

தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி அறிந்து பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள்,

கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார், அங்கு சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவி கொடுத்த புகாரின் பேரில், சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.