
ஆந்திராவை சேர்ந்த சிம்மாசலம், அவரது மனைவி பவானி புதுமண தம்பதிகள். ஐதராபாத்தில் வசித்து வந்த அவர்கள், உறவினர் வீட்டிற்கு செல்ல செகந்திராபாத்தில் இருந்து மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தனர்.
வாங்கப்பள்ளி – அலேரு இடையே சென்றபோது திடீரென இருவரும் ரயில் படிக்கட்டில் இருந்து விழுந்து உயிரிழந்தனர். மறுநாள் காலை ரோந்து பணியில் ஈடுபட்ட டிராக்மேன் சடலங்களை கண்டுபிடித்தார்.
தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், ரயிலில் இருவரும் வாக்குவாதம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனால், விபத்தா? அல்லது தகராறில் தற்கொலையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.















