மேற்கு வங்கத்தில்..

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு துறைகளில் படித்து வருகின்றனர்.
இங்கு சில நாட்களுக்கு முன்பு முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதே பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடாவடித்தனமாக பேசி தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் ”பல்கலைக் கழகம் எங்களுக்கு 2 வது வீட்டைப் போன்றது. அதன் அடிப்படையில் இந்த வளாகத்தில் எங்களுக்கு புகை பிடிக்கவும், மது குடிக்கவும் உரிமை உண்டு. இதற்காக நாங்கள் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை.

இது எங்களுடைய உரிமை.” எனக் கூறியுள்ளார்.இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இவ்வளவு பேசும் நீங்கள் எதற்காக படிக்க வேண்டும்? அதை விட்டு விடலாமே எனக் கூறியுள்ளார்.
இன்னொருவர் பொது இடங்களில் மது குடிக்கவோ, சிகரெட் பிடிக்கவோ அனுமதி கிடையாது. பல்கலைக் கழகம் பொதுவானது என்பதால் இங்கு நீங்கள்,

மது அருந்த புகைப்பிடிக்க கூடாது.பல்கலைக் கழகத்தை 2 வது வீடாக நினைக்கலாம் ஆனால் அது உங்களுக்கு சொந்தமானது கிடையாது. எனவே பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இது போன்ற மாணவிகளை உருவாக்கியதில் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் பங்கு உண்டு என சிலர் கூறியுள்ளனர்.
Leftist Bongs thinks #JadavpurUniversity as their second Home 🏡, so it is their right to smoke 💨 and drink 🍺 inside the campus, so oppose CC TV camera.
Now I came to understand why they stay in campus till 45-50 years, only to smoke & drink thinking this as their second home pic.twitter.com/4sHwPXTd0u
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) August 19, 2023















