கல்லூரி மாணவியை ஜாலி ரைய்டு அழைத்து சென்ற நண்பன்.. இறுதியில் நடந்த கொடூரம்!!

1197

திருவனந்தபுரத்தில்..

திருவனந்தபுரம் மாவட்டம் ஆற்றுங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிரண். இவருடைய தோழி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திவ்யா, கல்லூரி முடிந்த நிலையில், தனது தோழியுடன் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட சென்றுள்ளார்.

இதையறிந்த கிரண், தோழி திவ்யாவைக் காண உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்று, சாப்பிட்டு முடித்து விட்டு வா… ஜாலியாக ஒரு ரைய்டு போகலாம். அப்படியே உன்னை வீட்டில் விட்டு விடுகிறேன் என சொல்லி, திவ்யாவை தனது பைக்கில் அழைத்து சென்றுள்ளார்.

இங்கிருந்து அருகில் தான் தனது இன்னொரு தோழி இருக்கிறாள். அவளுக்கு உன்னை அறிமுகப்படுத்துகிறேன் என்று ஆசை வார்த்தைப் பேசி, அருகில் இருந்த குடோன் ஒன்றுக்கு திவ்யாவை அழைத்துச் சென்ற கிரண், அங்கே சென்றதும், திவ்யாவைக் கட்டிப் போட்டு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


பல மணிநேர சித்ரவதைக்கு பின்னர் நினைவு திரும்பிய திவ்யா, கிரண் சாப்பாடு வாங்க சென்றிருந்த நேரத்தில் அரைகுறை ஆடைகளுடன் குடோனில் இருந்து தப்பி சென்று அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், இளம்பெண்ணை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கிரணை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.