கல்லூரி மாணவி நடனம் ஆடிய போது சரிந்து மரணம்.. அதிர்ச்சி சம்பவம்!!

693

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் அரசு ஆதர்ஷ் கல்லூரியில் நடன நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் அதே பகுதியில் வசித்து வரும் குண்டு அஞ்சையா மற்றும் சாரதாலா தம்பதியின் 16 வயது மகள் பிரதீப்தி சிங் சக மாணவர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தார். திடீரென மாணவி மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி கொடுத்தனர். ஆனால் மாணவிக்கு மூச்சு பேச்சு இல்லை. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அந்த மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாணவிக்கு ஏற்கனவே இதயத்தில் ஓட்டை இருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பெற்றோரிடம் அறிவுறுத்தி இருந்தும் மருத்துவ செலவிற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் மாணவிக்கான அறுவை சிகிச்சையை தள்ளிப் போட்டு வந்த நிலையில் தான் மாணவி உயிரிழந்துள்ளார்.


இதுகுறித்து இதய நோய் மருத்துவர் ”இதய நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடலை வருத்தி செய்யும் எந்த வேலைகளையும் செய்ய அனுமதிக்கவேண்டாம். அவை அவர்களின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம். மேலும் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்”எனவும் அறிவுறுத்தியுள்ளார்