கல்லூரி மாணவி ஸ்ரீநிதி த.ற்.கொ.லை : போலீஸ் விசாரணை காரணமா? பெற்றோர் புகார்!!

419

திருவேற்காட்டில்..

திருவேற்காடு, கருமாரியம்மன் நகரில் வசித்து வருபவர் உதயகுமார். இவரது மனைவி உமா. இந்த தம்பதிக்கு ஸ்ரீநிதி (19) என்ற மகள் இருந்தார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். உதயகுமார் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இன்று காலை உமா வழக்கம் போல் காலையில் கண் விழித்த போது மகள் ஸ்ரீநிதி வீட்டில் உள்ள மற்றொரு அறையில் தூ.க்.கு.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டிருப்பதை பார்த்து அ.திர்ச்சியடைந்து க.தறி அ.ழுதார்.

உமாவின் அலறல் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்து, உடனடியாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் மாணவி ஸ்ரீநிதியின் உ.டலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.


அதன் பின்னர் மாணவி ஸ்ரீநிதியின் செல்போனை மீட்ட போலீசார், அவற்றில் ஆய்வு செய்து மாணவியின் பெற்றோரிடம் தொடர்ந்து வி.சாரணை நடத்தி வருகின்றனர். மகளின் மரணம் குறித்து பெற்றோர் கூறும் போது, ‘‘நாங்கள் இதற்கு முன்னர் சிவசங்கர் நகரில் குடியிருந்தோம்.

வீட்டு உரிமையாளரான ரேவதியிடம் 2 பவுன் நகையை குடும்ப பி.ரச்சனை காரணமாக வாங்கி அடகு வைத்தோம். அதன் பின்னர் சில காரணங்களால் அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்தில் குடிபெயர்ந்தோம்.

இதைத் தொடர்ந்து ரேவதியின் கணவர் வினோத், நாங்கள் அவரது மனைவியிடம் 2 பவுனுக்கு பதிலாக 7 பவுன் வாங்கியதாக கூறினார். இதனால் எழுந்த பி.ரச்சினையில் அவர் எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் எங்களை அழைத்து விசாரித்தனர். த.ற்.கொ.லை செ.ய்து கொள்வதற்கு முன்பு,போலீஸ் அதிகாரி ஒருவருடன் எங்கள் மகள் செல்போனில் எங்கள் தரப்பு நியாயத்தைப் பேசியிருக்கிறாள். அவளது செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக மன உளைச்சலில் எங்களது மகள் ஸ்ரீநிதி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். எங்கள் மகளின் சா.வுக்கு காரணமானவர்கள் த.ண்டிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.