கள்ளக்காதலனின் மனைவியை சினிமா பாணியில் ஊசி போட்டு… நடந்த விபரீதம்!!

3815

கேரளா..

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளத்தை அடுத்த புல்லுக்குளங்கரா பகுதியைச் சேர்ந்தவர் அருண். 34 வயதான இவருக்கு 28 வயதில் சினேகா என்ற மனைவி உள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியான சினேகா பிரசவத்திற்காக, தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்நிலையில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து பத்தனம்திட்டா மாவட்டம் பருமலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சினேகா அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. நேற்று சினேகா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குழந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்துள்ளார் சினேகா. அவருடன் அவரது தாயாரும் இருந்துள்ளார்.


இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அனுஷா என்பவர், நர்ஸ் போல் மாறுவேடமிட்டு, சினேகாவின் அறைக்குள் நுழைந்துள்ளார். மேலும் சினேகாவுக்கு ஒரு ஊசி போட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட அவரது தாய், சினேகா ஏற்கனவே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டார். அவருக்கு ஏன் இப்போது ஊசி என கேட்டுள்ளார். அதற்கு சரியான காரணத்தை கூறாத அனுஷா, ஊசி போடுவதிலேயே குறியாக இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவரது தாய், மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து அறைக்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள், அனுஷா நர்ஸ் இல்லை என்பதை கண்டுப்பிடித்தனர்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனுஷாவை கைது செய்து விசாரித்ததில் சினேகாவின் கணவர் அருணுக்கும் அனுஷாவுக்கும் கள்ள உறவு இருந்ததும் அதனை சினேகா எதிர்த்ததால் அவரை கொலை செய்ய மருத்துவமனைக்கு மாறு வேடத்தில் வந்ததும் தெரியவந்தது.

அதுமட்டுமின்றி சினேகாவின் மரணத்தை இயற்கை மரணமாக காட்ட, வெற்று ஊசியின் மூலம் அவரது நரம்புகளில் காற்றை செலுத்தி, மாரடைப்பு ஏற்பட செய்து அவரை கொலை செய்ய முயன்றதும் விசாரணையில் வெளியாகியுள்ளது. அருண் வாட்ஸ்அப் மூலம் சினேகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை தெரிவித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் இந்த கொலை முயற்சியில் அருணுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அருணும் அனுஷாவும் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காதலித்ததாகவும் இருவருக்கும் திருமணம் ஆன பிறகும் கூட அவர்களின் உறவு தொடர்ந்துள்ளது.

கள்ளக்காதலனை அடைய அவரது மனைவியை சினிமா பாணியில் இளம் பெண் ஒருவர் வெற்று ஊசி போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுஷாவை கைது செய்துள்ள போலீசார் அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அனுஷா பார்மசிஸ்ட் படிப்பை முடித்துள்ளார. அனுஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடைபெற்றுள்ளது. அவருடைய இரண்டாவது கணவர் வெளிநாட்டில் உள்ளார்.

இந்நிலையில் அருணுடன் கள்ளக்காதலில் இருந்த அனுஷா, அவரது மனைவியை கொன்றுவிட்டு அவருடன் சேர்ந்து வாழ திட்டுமிட்டது தெரியவந்துள்ளது.