கள்ளக்காதலனை ஏவி கணவனை படுகொலை செய்த மனைவி… போலீசாரே அதிர்ச்சியடைந்த சம்பவம்!!

508

புதுச்சேரியில்..

புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் 33 வயதான சுப்பிரமணி. கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சிதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு இதுபோல் அவர்களிடையே தகராறு ஏற்பட்டதால் கணவரிடம் கோபித்துக்கொண்டு ரஞ்சிதம் குழந்தைகளுடன் தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டார். 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணி அங்கு சென்று ரஞ்சிதத்தை குடும்ப நடத்த அழைத்தார். ஆனால் ரஞ்சிதம் மறுத்து விட்டார்.

இதனால் வேதனையில் ஆழ்ந்த சுப்பிரமணி மேட்டுப்பாளையம் பள்ளிகூட வீதியில் வசிக்கும் தனது தாய் வீட்டுக்குச் சென்று தனது மனைவியின் நடத்தை சரியில்லை எனக் கூறி அழுதுள்ளார்.


மறுநாள் நாகம்மாள் கட்டட வேலைக்கு சென்ற நிலையில், அங்கு வந்த நபர் ஒருவர் நாகம்மாளிடம் உனது மகன் சுப்பிரமணி அவரது வீட்டில் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் பிணமாக கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு பதறிப்போன நாகம்மாள் அலறியடித்து வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது சுப்பிரமணி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு நாகம்மாள் கதறி அழுதார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கினர். சுப்பிரமணியனின் மனைவி ரஞ்சிதத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக மாமியார் கூறியதன் பேரில் போலீசார் ரஞ்சிதத்திடம் விசாரணை நடத்தினர்.

இதில் சுப்பிரமணியணை தனது கள்ளக்காதலனை ஏவி கழுத்தை அறுத்து கொலை செய்த திடுக்கிடும் தகவலை ரஞ்சிதம் கூறியதைக் கேட்டு போலீசாரே அதிர்ச்சியடைந்தனர். கணவனிடம் கோபித்துக் கொண்டு உளவாய்க்கால் அகரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற ரஞ்சிதம், அங்கு மாரியப்பன் என்பவருடன் பழகி வந்துள்ளார்.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாற இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இது சுப்பிரமணிக்கு தெரிய வர இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சுப்பிரமணி மதுகுடித்து விட்டு வந்து ரஞ்சிதத்தை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

ரஞ்சிதத்தின் கள்ளக் காதலன் மாரியப்பனிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சுப்பிரமணியனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

நள்ளிரவு சுப்பிரமணி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மாரியப்பன் வீட்டின் பால்கனி வழியாக ஏறி சென்று சுப்பிரமணியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதைதொடர்ந்து ரஞ்சிதம் மற்றும் கள்ளக்காதலன் மாரியப்பன் ஆகிய இருவரையும் மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர். கணவனை மனைவியே கள்ளக்காதலனை ஏவி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.