கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க நண்பனை குத்திக்கொன்ற நபர்.. நடந்த விபரீதம்!!

667

திருச்சி….

திருச்சி அடுத்த திருவெறும்பூர் அடுத்த கக்கன் காலனியை சேர்ந்தவர் சதீஷ் (எ) சக்திகுமார்(34). வேன் டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி விவாகரத்து பெற்று 3 ஆண்டுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இவரது நண்பர், திருவெறும்பூர் காந்திநகரை சேர்ந்த முத்துப்பாண்டி (32). கார் டிரைவர். திருமணமாகாதவர்.

இவருக்கு, சதீஷ் வீட்டருகே வசிக்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.  இதனால் முத்துப்பாண்டி, அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார்.

அந்த பெண்ணுடன் ஏற்கனவே சதீசுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் முத்துபாண்டியும் அங்கு வருவதை பிடிக்காத சதீஷ், அவளுடன் தொடர்பை விட்டுவிடும்படி அவரை கண்டித்து, பெண்ணின் சகோதரர்களிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றார்.


இந்நிலையில், நள்ளிரவு அந்த பெண்ணின் வீட்டுக்கு முத்துப்பாண்டி சென்றார். இதை தனது வீட்டு வாசலில் நின்று பார்த்த சதீஷ், அவரை அழைத்து, இங்கு வராதே என்று எச்சரித்தும் நீ கேட்கவில்லை.

அந்த பெண்ணின் அண்ணன்களிடம் சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  இதில் ஆத்திரமடைந்த முத்துபாண்டி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீசை சரமாரி குத்தியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சதீஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை செய்த கத்தியுடன் முத்துப்பாண்டி  திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.