கள்ளக்காதலை கைவிட்ட ஆத்திரம்… நடுரோட்டில் இளம்பெண்ணை எரித்த காதலன்!!

312

கள்ளக்காதலை திடீரென கைவிட்ட ஆத்திரத்தில், நடுரோட்டில் இளம்பெண்ணைக் காதலன் கத்தியால் குத்தி கொலைச் செய்து, எரித்துக் கொன்ற கொடூர செயல் கடவுளின் தேசமான கேரளத்தில் அரங்கேறியுள்ளது அதிர வைத்துள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொடுமுண்டா கடற்கரை சாலையில் எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைச் செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரிவியா(30) என்பதும்  தெரிய வந்துள்ளது.

திரிதாலா பட்டித்தர கங்கநாத் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர்  பிரிவியா (30). இவர் வழக்கம் போல காலையில் வேலைக்குச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திரிதாலா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் பிரிவியாவைக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஏற்கெனவே திருமணமான நிலையில், பிரிவியா தனது கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், விவாகரத்துக்கு பிறகு சந்தோஷுடன் நெருங்கி பழகி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிரிவியாவை சந்தோஷ் திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். ஆனால், சந்தோஷுடன் உல்லாசம் அனுபவித்து, தொடர்ந்து பழகி வந்த பிரிவியா, சந்தோஷைத் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். அதன் பின்னர், சந்தோஷுடன் பழகுவதையும் நிறுத்தியுள்ளார்.


இந்நிலையில், பிரிவியாவுக்கு வேறொரு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இம்மாதம் 29ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், இருவருக்குமிடையே இருந்த இந்த முன்விரோதம் தான் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைப் பார்த்து வரும் பிரிவியாவின் உடல் வயலை ஒட்டிய சாலையில் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. அந்த பகுதியில் சுற்றிலும் இருந்த புற்கள் எரிந்து காணப்பட்டது.

அருகில் பிரிவியாவின் ஸ்கூட்டரும் கண்டெடுக்கப்பட்டது. பிரிவியா கத்தியால் பலமாக குத்தி கொல்லப்பட்டு, உடல் எரிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து கொலைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியை போலீசார்  கண்டெடுத்துள்ளனர். இறந்தவரை அடையாளம் கண்டதில், கொலையை செய்தது சந்தோஷ் என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

பிரிவியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.