கள்ளக்காதல் விபரீதம்… கணவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

525

புதுச்சேரி…

புதுச்சேரி மேட்டுப்பாளையம் மருத்துவமனை வீதியைச் சேர்ந்தவர் 32 வயதான சுப்பிரமணி. கட்டிடத் தொழில் வேலை செய்து வரும் இவருக்கு 27 வயதில் ரஞ்சிதம் என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த மூன்றாம் தேதி இந்த தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ரஞ்சிதம் கோபித்துக் கொண்டு குழந்தைகளோடு அதே பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பி வந்த போது, வீட்டின் உள்ளே சுப்பிரமணி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

ரஞ்சிதத்திற்கும், உழவாய்க்கால் அகரத்தைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் மாரியப்பனுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த ரஞ்சித்தின் கணவர் சுப்ரமணி, பலமுறை மனைவியை கண்டித்துள்ளார்.

இருந்தபோதிலும் சில தினங்களுக்கு முன்பு மாரியப்பன் வீட்டிற்கு ரஞ்சிதம் சென்றுள்ளார். இதனை அறிந்த சுப்பிரமணி ரஞ்சிதத்தை கண்டித்துள்ளார். அதில் கோபித்துக் கொண்டு சகோதரி வீட்டிற்கு சென்ற ரஞ்சிதம் அதில் கோபித்துக் கொண்டு சகோதரி வீட்டிற்கு சென்ற ரஞ்சிதம், நடந்தவற்றை மாரியப்பனுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவர் சுப்பிரமணி அடித்து டார்ச்சர் செய்வதாக மாரியப்பனிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சுப்பிரமணியை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் பக்கத்து வீட்டு மாடி வழியாக வந்து சுப்பிரமணி வீட்டிற்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த சுப்ரமணியை மாரியப்பன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரஞ்சிதம் மற்றும் அவரது காதலன் மாரியப்பன் இருவரையும் கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து மாரியப்பன், எங்கள் காதல் விவகாரத்தை அறிந்து சுப்ரமணி என்னை போனில் ஆபாசமாக பேசினார். ரஞ்சிதத்தை தொடர்ந்து டார்ச்சர் செய்துள்ளார். அதனால் சுப்பிரமணியை கொலை செய்ய முடிவு செய்தேன்.

வழக்கமாக ரஞ்சிதத்தை பார்ப்பதற்கு அவர்களின் பக்கத்து வீட்டின் மாடி வழியாக ஏறி குதித்து ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த சுப்பிரமணியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த நின்னு தெரிவித்துள்ளார்.