கள்ளக் காதலை கைவிட மறுத்த கணவனை பாம்பை ஏவி கொன்ற கொடூர மனைவி!!

333

ஆந்திர மாநிலத்தில்..

ஆந்திர மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும், காண்டிராக்டருமான கோச்சேரா பிரவீன் (வயது 42) கடந்த 9ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக பிரவீன் உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி லலிதா கூறினார்.

இதனை நம்பாத பிரவீனின் தாயார் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல் துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பிரவீன் மனைவியின் நடவடிக்கைகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே அவரை கஸ்டடியில் எடுத்து துருவித் துருவி விசாரித்தனர். அதில் பிரவீன் மரணத்திற்கு காரணம் மாரடைப்பு இல்லை என்பதும் மேலும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகின.


பிரவீன் – லலிதா தம்பதியருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். ஆனால், தொழில் விஷயமாக செல்வதாகக் கூறி பிரவீன் அடிக்கடி வெளியூர் சென்றிருக்கிறார்.

இதனால் சந்தேகமடைந்த லலிதா கண்காணித்ததில், பிரவீன் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு முறையில் இருப்பது தெரியவந்ததுள்ளது. இதனால் கணவருடன் லலிதா அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையிலும் அவருடைய நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற லலிதா, பிரவீனை கொல்ல முடிவெடுத்து தனது வீட்டில் வேலை செய்து வரும் சுரேஷிடம் கொலைக்கு உதவி செய்ய சொல்லியுள்ளார். அப்படி செய்தால் நிலம் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனையடுத்து, பிரவீனை கொல்ல சதித் திட்டம் தீட்டிய அவர்கள், பாம்பை கடிக்க விட்டு கொல்ல பக்காவாக ஸ்கெட்ச் போட்டனர். இதற்கான தனது 34 பவுன் தங்க நகைகளை அவர்களுக்கு லலிதா கொடுத்துள்ளார்.

கடந்த 9ஆம் தேதி இரவு பிரவீன் குடிபோதையில் தனது அறையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, பிரவீன் மற்றும் அவனது கூட்டளிகளை வரவழைத்த லலிதா, அறையைக் காட்டிவிட்டு வேறொரு அறைக்கு சென்றுவிட்டார்.

ஒருவர் பிரவீன் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தினர். இதனையடுத்து, தாங்கள் எடுத்து வந்த பாம்பை விட்டு பிரவீனை கடிக்க வைத்தனர். பிரவீன் உயிரிழந்ததை உறுதி செய்துகொண்ட அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

அனைத்தும் முடிந்த பின்னர் தனது கணவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக ஊரைக் கூட்டி அழுதுள்ளார் லலிதா. ஆனால், இறுதிச் சடங்கிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது பிரவீன் உடல் நீல நிறமாக மாறியதால் சந்தேகமடைந்த அவரது தாயார்,

போலீசில் புகார் அளிக்கவே லலிதா போட்ட அத்தனை நாடகங்களும் அம்பலமாகின. இதனையடுத்து, லலிதா மற்றும் கொலைக்கு உதவிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.