சென்னையில்..

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, புச்சம்மாள் தெருவைச் சேர்ந்தவர் பூமா தேவி. இவர் கடந்த 20-ம் தேதி புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன்.
என்னுடைய கணவர் சூளைமேட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். என்னுடைய மகள் 8-ம் வகுப்பு படித்த வருகிறார். நான் வீட்டின் அருகிலுள்ள குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துவருகிறேன்.

என்னுடைய மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன். என்னுடைய வீட்டுக்கு இரண்டு சாவிகள் இருக்கின்றன. அதில் ஒரு சாவி தரமணியிலுள்ள மாமனாரிடம் இருக்கிறது.
அவர் முதியோர் பென்ஷன் வாங்க வரும் நேரத்தில், அந்தச் சாவியைப் பயன்படுத்தி வீட்டில் தங்கியிருப்பார். என்னுடைய மாமனார், 13.10.2023-ம் தேதி முதல் 18.10.2023-ம் தேதி வரை வீட்டில் தங்கியிருந்துவிட்டு, தரமணிக்குச் சென்றார்.

கடந்த 20-ம் தேதி மாலை பள்ளிக்குச் சென்றிருந்த என் மகளை அழைத்து வர வீட்டை பூட்டிவிட்டுச் சென்றிருந்தேன். பின்னர் வீடு திரும்பியபோது கதவு திறந்த நிலையில் இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள், வெள்ளிக் கொலுகள், என் மகளின் படிப்புக்காகத் தங்க நகைகளை அடகு வைத்திருந்த ரசீதுகள் ஆகியவை திருட்டுப்போயிருந்தன.

அதேநேரத்தில் வீட்டின் வாசலிலுள்ள சாமி படத்தில் வைத்திருந்த பணம் அப்படியே இருந்தது. பீரோவிலிருந்த துணிகள் கலைக்கப்படவில்லை. எனவே, காணாமல்போன தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்தார்.

விசாரணையில் பூமாதேவியின் வீட்டின் அருகே வசிக்கும் சுப்புலட்சுமி (38) மீது போலீஸாருக்குச் சந்தேகம் எழுந்தது.அதனால் அவரிடம் விசாரித்தபோது பூமாதேவி, வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற நேரத்தில் கள்ளச்சாவி மூலம் கதவைத் திறந்து தங்க நகைகளைத் திருடியதாக சுப்புலட்சுமி போலீஸாரிடம் தெரிவித்தார்.
அதனால் அவரிடமிருந்து 10 சவரன் எடையுள்ள தங்க நகைகள், 186 எடையுள்ள வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு சுப்புலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.















