கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கொடூரம்!!

600

திருப்பூரில்..

திருப்பூர் செந்தில் நகரில் வசித்து வருபவர், ஈரோடு மாவட்டம் தேவம்பாளையத்தே சேர்ந்த ரவிக்குமார் (வயது 42). எலக்ட்ரீசியனாக உள்ளார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிமணி (36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி இரவு ரவிக்குமார் உடல்நல குறைவு காரணமாக இறந்துவிட்டதாக ரவிக்குமாரின் தந்தைக்கு ஜோதிமணி தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ரவிக்குமாரின் உடலை சொந்த ஊரான தேவம்பாளையத்திற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றார். அப்போது ரவிக்குமாரின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட உறவினர்கள், சந்தேகமடைந்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


 இதையடுத்து ரவிக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் ரவிக்குமாருக்கு உடல் உறுப்புகளின் உள்பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனால் சந்தேகமடைந்த திருமுருகன்பூண்டி போலீசார் ஜோதிமணியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஜோதிமணியே தனது கணவரை அடித்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ரவிக்குமார் குடிப்பழக்கம் உடையவர். ஜோதிமணிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்துள்ளது.

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கணவனின் துன்புறுத்தலை தாங்க முடியாத ஜோதிமணி, ரவிக்குமார் மது குடித்து விட்டு வரும்போது அவருக்கு தோசை கரண்டியால் சூடு வைத்ததுடன் அடிக்கவும் செய்துள்ளார். தொடர்ந்து கட்டையாலும் தாக்கி வந்துள்ளார்.

போதை மயக்கத்தில் இருந்ததால் ரவிக்குமாருக்கு எதுவும் தெரியவில்லை. கடந்த 22-ந்தேதி இரவும் வழக்கம்போல இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜோதிமணி கட்டையால் ரவிக்குமாரின் தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த ஜோதிமணி கணவனை கொலை செய்ததை மறைக்க நாடகமாடியுள்ளார். கணவன் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களை மறைக்க உடனடியாக அவருக்கு முழுக்கை சட்டை, பேண்ட் அணிவித்துள்ளார். ரவிக்குமாரின் உறவினர்களுக்கு போன் செய்து,

ஏற்கனவே விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார் என தெரிவித்துள்ளார். அதனை உறவினர்களும் நம்பிவிட்டனர். ரவிக்குமாருக்கு இறுதிசடங்கு நிகழ்ச்சி செய்யும் போதுதான் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன்பிறகு போலீசில் தெரிவிக்கவே ஜோதிமணி கணவனை தாக்கி கொன்றதை ஒப்புக்கொண்டார். கைதான ஜோதிமணியை போலீசார் அவினாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.