கன்னியாகுமரி…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மனைவியுடனான தவறான உறவை கண்டித்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில் அருகேயுள்ள குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் ரவுடி தங்க கிருஷ்ணன். வெல்டிங் பட்டறை நடத்தி வரும் இவர் மீது, கொலை மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த வாரம் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை வீட்டின் அருகிலேயே வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து போலீசார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய வந்த நிலையில், 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரவுடி தங்க கிருஷ்ணன் மனைவிக்கும்,

பிரபு ஜெகதீஸ் என்பவருக்கும் தவறான உறவு இருந்தததும் அதனை தட்டிக்கேட்டதால் வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் மேலும் மூவரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான பிரபு ஜெகதீசனை தேடி வருகின்றனர்.















