கள்ள காதலை கைவிட மறுத்த மனைவி… மனஉளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

3905

திருச்சி…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துரை நெடுஞ்சாலைகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (46). கொத்தனால் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், உள்ளூரில் போதிய வருமானம் கிடைக்காததால் வெளியூரில் தங்கி ராஜா வேலை பார்த்து வந்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக நித்யா துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, நித்யாவுக்கு அந்த கடையில் வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.


இந்த விவகாரம் நாளடைவில் கணவர் ராஜாவுக்கு தெரியவந்தது. இதனையடுத்து, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடும் மனஉளைச்சலில் இருந்த ராஜா ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், ராஜா உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அப்போது, தற்கொலைக்கு காரணமாக இருந்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.